Friday, September 7, 2012

நம்ப மறுத்த உண்மை காதல் கவிதை

நம்ப மறுத்த உண்மை காதல் கவிதை

 பெண்ணே உன் வருகைக்காக காத்திருந்தேன் ஆனால்
 நான் உனக்காக காத்திருப்பதை ஏனோ நீ 
ஒளிந்திருந்து ரசித்தாய் - கடிகார முள் கூட 
என் மனதில் காயத்தை ஏற்படுத்தியது உன்னால்.......

நீ என் நெஞ்சில் ஏற்படுத்திய காயத்தை ஏனோ 
என் மனம் நம்ப மறுக்கிறது....
காண்பதெல்லாம் வெறும் கனவே - என்ற 
கற்பனையில் தான் என் காலமும் நகர்கிறது...

உன்னுடன் வார்த்தை பரிமாற்றம் மட்டும் அல்ல
பார்வை பரிமாற்றமும் தடைபட்டதே - பெண்ணே 
உடைக்கபட்ட என் இதயத்தில் உள்ள சிறு சிறு 
துண்டுகளும் கண்ணாடிபோல் உன்னையே காட்டுகிறது 

காலத்தின் சோதனையால் 
என் காதலும் காயமானது 
கண்ணீர் துளிகள் 
அதில் அமிர்தமானது 

4 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

அம்பாளடியாள் said...

வலி தரும் கவிதை வரிகள் அருமை சகோ .மேலும் இனிய கவிதைகள் தொடர வாழ்த்துக்கள் .

Ramani said...


உடைக்கபட்ட என் இதயத்தில் உள்ள சிறு சிறு
துண்டுகளும் கண்ணாடிபோல் உன்னையே காட்டுகிறது //

அருமையான வரிகள்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 1