Monday, August 27, 2012

காத்திருக்கும் காதல்......


ஒவ்வொரு நாளும் நான் உன்வருகைக்காக காத்திருக்கிறேன் 
உன்னை கண்டதும் ஒரு நிமிடம் நான் என்னையே மறக்கிறேன்..,
என் காதல் உன்னால் கவிதையானது 
அதை நீ வாசித்த நிமிடம் விடுகதையானது...........
என் கவிதைகள் அழகாக இருக்கிறது என்று வர்ணிக்கும் போது 
உன்னையே நீ வர்ணிப்பதாக மனம் நினைக்குதடி .............
என் கவிதைக்காக நீ காத்திருக்கிறாய் 
நான் உன்னை காதலிப்பதை மறந்து..........

Friday, August 10, 2012

கருப்பு நிலவாக உன் கண்கள்

கருப்பு நிலவாக உன் கண்கள் 

வெள்ளை  மேககூட்டங்களுகிடையில்  தோன்றிய
கருப்பு நிலவாக உன் கண்கள் ....
ஒவ்வொரு முறை என்னை 
ஓர கண்ணால் தீண்டும் போது 
என் உயிரை பற்றி களவாடி செல்கிறதே .....
உன் பார்வையின் அர்த்தம் தான் என்ன!!!


நான் உன்னை நேசிப்பது போல் நீயும் 
என்னை நேசிக்கிறாய் என்றால், ஏன் இந்த மௌனம் !
நம் காதலை நீயே சொல்லிவிடு - ஏன் என்றால் 
நம் காதலை சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை 
- நிலாரசிகன் ஜெயமாறன் 


Friday, August 3, 2012

நிலாரசிகனின் காதல் கவிதை

நிலாரசிகனின் காதல் கவிதை 

நிலவே என்னிடம் நீ நிலவை பார்க்க முறையிட்டாய்
என்ன ஒரு அதிசயம் - ஒரு நிலவே இன்னொரு
 நிலவை ரசிக்கிறதே என்று ......

நான் உன்னைநினைது எழுதிய கவிதைகளை
படித்துவிட்டு யாரை நினைத்து எழுதினாய்
என்னிடமே கேலியாக கேட்டாய் ...........

ஒரு அழகிய கவிதை ஒன்று
இந்த கிறுக்கனின் கிறுக்கலை
பாராட்டியதே என்ன  ஆனந்தம்.......

என் கவிதைகளை நேசிக்கும் நீ
என்று தான் என்னையும் நேசிப்பாயோ
என்றும் உன் நினைவில் வாடும் நிலாரசிகன் 

Thursday, August 2, 2012

என் உயிர் தோழியே .......

என் உயிர் தோழியே .......

மழலைபோல பழகும் உந்தன் குணம் என்
மனதை உருக செய்கிறதே
உன்வார்தைகளை கேட்கும் போது
என்னையே நான் மறக்கிறேன்
விண்ணுலக தேவதை ஒன்று
மண்ணுலகில் பிறந்திருக்கிறது எனக்காக
சந்திக்கும்போதெல்லாம் சண்டைபோடுகின்றோம்
அதுவும் காதல் என்பதை மறந்து


என் உயிரே நீதான்......

என் உயிரே நீதான்...........

கேளிக்கையாக பகிர்ந்துகொண்ட
என் காதல் இன்று கேள்விகுறியானது ….
என்னை நேசிப்பது போல் பழகி
என் இதயத்தையே உடைதுவிட்டாயே ….

என்னுயிர் தோழியே எனக்கு ஒரு உதவி வேண்டும்
உன்னால் உடைக்கப்பட்ட என் இதயத்தை
மறுபடியும் கொடுத்துவிடு ….

பெண்ணே உன் நடிப்பால் ஏமாறிய எனது
இதயமோ உண்மையை ஏனோ
ஏற்க்க மறுக்கிறது…..

பிரியமானவளின் நினைவுகளுடம்
கிறுக்கிகொண்டிருக்கும் கிறுக்கன்

நான் உன்னிடம் நேசித்தது என்ன !!!!

நான் உன்னிடம் நேசித்தது என்ன !!!!

நான் காதலிப்பது நீ என்று தான்

நினைத்து வாழ்த்து வந்தேன்....

பின்புதான் தெரிந்தது நான் காதல் செய்தது

என் இதயத்தில் நீ ஏற்படுத்திய காயத்தை என்று.....

மருந்து போடுவதற்கோ மனமில்லை – காரணம்

உன்னை மறக்கும் எண்ணம் என் மனதிற்கு இல்லை.......

காதலா இல்லை ................


சிரித்து சிரித்து பேசியதால்
சிந்திக்காமலே காதலிதுவிட்டேன்
என்னுயிர் தோழன் என்றவளே
இன்று இவன் யார் என்றால்
காரணம் காதலா இல்லை
அவளின் கல் இதயமா
என்காதலை புரிந்துகொள்ளாமல்
பிரித்து சென்றவள் நீ
அதை புரிந்துகொள்ளாமல்
திரிந்து கொண்டிருப்பவன் நான்………..